Sunday, January 13, 2013

பொங்கலோ பொங்கல் !


14-1-2013 (தை-1) திங்கட்கிழமை பொங்கல் திருநாள்

இன்று காலை 10.10 மணிக்கு (சூரியன் தனுர்ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசம்) 

தை மாதம் பிறப்பு (உத்திராயண புண்ணியகாலம்)

காலை   6.00 - 7.00 மற்றும் 9.00 - 10.30 பொங்கல் புது பானை வைக்கலாம்

மதியம்  12.00 - 1.30 மற்றும் 1.30 - 3.00 படையல் இட்டு சூரிய வழிபாடு செய்யலாம்.

15-1-2013 (தை-2) செவ்வாய்க் கிழமை மாட்டுப்பொங்கல்

(திருவள்ளுவர் தினம்)

காலை   8.00 - 9.00 சுக்ர ஹோரை நல்ல நேரம்

மதியம்  11.00 - 12.00 பொங்கல் வைக்கலாம்

மதியம்  12.00 - 1.00 படையல் செய்யவும்

மாலை  5.00 - 6.00 கோ பூஜை செய்து, மஞ்சு விரட்டு நடத்தலாம்.

சூரியபகவானுக்கு படையல் இட்டுவழிபாடு செய்கின்றபோது ''ஓம் சூரிய நாராயண நமஹ''  என்று ஒன்பது தடவைகள் உளமார உச்சரித்து வணங்குவது உகந்தது. 

சூரிய வணக்கம்

'' காசினி இருளை நீக்கும்
       கதிரொளி யாகி எங்கும்
   பூசனை உலகோர் போற்றப்
       புசிப்பொடு சுகத்தை நல்கும் 
   வாசி ஏழுடைய தேர்மேல்
       மகாகிரி வலமாய் வந்த
   தேசிகா எமை ரட்சிப்பாய் 
       செங்கதிரவனே, போற்றி ! போற்றி !!''

சூரிய காயத்ரி மந்திரம் ;

'' ஓம் அசுவ த்வஜாய வித்மஹே
   பாசஹஸ்தாய தீமஹி 
   தந்நோ சூர்ய
   ப்ரசோதயாத் ''

சூரிய பகவானுக்கு படையல் இட்டு வணங்கும் பொழுது மேற்கண்ட பாடலை உச்சரித்து வழிபடுவது நலம்.

21-1-2013 (தை-8) திங்கட்கிழமை - தை கிருத்திகை.

27-1-2013 (தை-14) ஞாயிற்றுக்கிழமை - தை பூசம் (வடலூர் ஜோதி தரிசனம்)

9-2-2013 (தை-27) சர்வ தை அமாவாசை.

'' வளமோடு வாழுங்கள் '' - மதுரகவி.